×

தென்மேற்கு ராணுவ கமாண்டன்ட் தலைமை அலுவலகத்தில் குரூப் ‘சி’ பணியிடங்கள்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள தென்மேற்கு ராணுவ கமாண்டன்ட் தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

  1. Stenographer- Grade II: 5 இடங்கள் (பொது) தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதும் திறனும், அதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும், இந்தியில் 65 நிமிடங்களிலும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ. 25,500-81,100.
  2. Cook: 1 இடம் (பொது). தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சமையல் கலையில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
  3. Multi Tasking Staff: (Head Messenger): 1 இடம் (பொது).
  4. MTS (Messenger): 5 இடங்கள் (பொது)
  5. MTS (Safaiwala): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
  6. MTS (Chowkidar): 2 இடங்கள் (பொது)
  7. MTS (Washerman): 1 இடம் (பொது)
  8. MTS (Daftry): 1 இடம் (பொது)
  9. MTS (Gardener): 2 இடங்கள் (பொது).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 35 வயது வரையிலும், ஒபிசியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 38 வயது வரையிலும், எஸ்சி/எஸ்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையிலும், முப்படைகளில் பணியாற்றியவர்களுக்கு அவர்களின் வயதிலிருந்து கழித்த சர்வீஸ் ஆண்டுகள், நிர்ணயிக்கப்பட்ட வயதை விட 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.4.2023.

The post தென்மேற்கு ராணுவ கமாண்டன்ட் தலைமை அலுவலகத்தில் குரூப் ‘சி’ பணியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Southwest Military Commanant Head Office ,Group ,South-West Military Commanant Head Office ,Jaipur, Rajasthan ,Southwest Military Commandant Head Office ,Dinakaran ,
× RELATED மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால்...